Jesus Power
Ministries

Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

Showing archive August 2026
Clear Filter
மாராவை மதுரமாக்கும் மரம்
24 Aug

மாராவை மதுரமாக்கும் மரம்

«“கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்.” — யாத்திராகமம் 15:25»

இன்றைய வேதப்பகுதி:யாத்திராகமம் 15:22–27 நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். பலவிதமான சோதனையான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் சகஜமானவை. ஆனால், நம்முடைய உண்மையான பிரச்சினை எது தெரியுமா? பிரச்சினை இருப்பது மட்டும் பிரச்சினையல்ல; அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழியை அறியாமல் இருப்பதுதான் பெரிய பிரச்சினை. நோய் ஒரு பிரச்சினை...

Read
சமாதானமும் சந்தோஷமும்
22 Aug

சமாதானமும் சந்தோஷமும்

«“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” — பிலிப்பியர் 3:14»

இன்றைய வேதப்பகுதி: பிலிப்பியர் 3:1–15 சமாதானம் என்பது நம்முடைய ஆசையாக இருக்க வேண்டும். சந்தோஷம் என்பது நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். ஆனால், அவைகளே நம்முடைய வாழ்க்கையின் இலக்குகளாக இருக்கக் கூடாது. அவற்றையே இலக்குகளாகக் கொண்டு வாழும்போது, நாளடைவில் சமாதானக் குறைவும் சந்தோஷக் குறைவும் ஏற்படலாம். சமாதானமும் சந்தோஷமும், நாம் ஒரு உயர்ந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது ஏற்படும் பிரதிபலன்களாகும். எனவே, ஒரு பரிசுத...

Read
உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..
21 Aug

உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..

நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்... ஏசாயா 6:5

இன்றைய வேத பகுதி:ஏசாயா.6:1-8 ​​​​​நம்மை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோ, நம்மைப் பிறர் மதிக்கவில்லை என்பதோ, பெரிய விஷயங்கள் அல்ல. முதலாவது நாம் நம்மை ஏற்றுக் கொண்டோமா என்பதே முக்கியம். முதலாவது நாம் நம்மை மதிக்கின்றோமா என்பதே முக்கியம். சிலர் தங்களைத் தாங்களே மட்டமாகவும், மதிப்பற்ற விதத்திலும் பார்த்து சலித்துக் கொள்வார்கள். ஆனால், மற்றவர்கள் தங்களை உயர்வாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் பார்க்க வேண்டும் என்று...

Read
இன்றே செயல்படு..
20 Aug

இன்றே செயல்படு..

இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன?... அப்போஸ்தலர் 22:16

இன்றைய வேத பகுதி: அப்போஸ்தலர்.22:1-21 நாளைக்குச் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவைகளை முந்திக்கொண்டு இன்றே செய்ய விரும்புதல் நல்லதல்ல. அதே வேளையில், பல விஷயங்கள் இன்றே செய்ய வேண்டியவை. இவைகளை நாளைக்கு எனத் தள்ளிப் போடுவது நலமாகயிராது. சில நேரங்களில் இன்று சில சிரமங்களுக்குள் செல்ல மனம் விரும்பாமல், அவைகளை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, இன்றைய தினத்தை விடுதலையாக்கிக் கொள்வது இயற்கையான இயல்பு. ஆ...

Read
கர்த்தர் நல்லவரே
19 Aug

கர்த்தர் நல்லவரே

கர்த்தரைத் துதியுங்கள்;அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது சங்கீதம்.107:1

இன்றைய வேதபகுதி:சங்கீதம் 107:1-22 நாம் நினைத்தபடி காரியங்கள் நடந்தாலும் நடக்காமல் போனாலும் கர்த்தர் நல்லவரே. சூரியன் பிகாசித்தாலும், அந்த பிரகாசம் நமக்குத் தெரியாமல் மேகங்கள் மறைத்தாலும், சூரியனைக் குறித்த கருத்தும் நம்பிக்கையும் மாறாது. அது ஒளியைக் கொடுக்கின்ற ஒன்று என்பதை யாரும் சந்தேகிப்பதில்லை. அது போல சில பிரச்சினைகள், நோய்கள், நெருக்கடிகள், போராட்டமான சூழ்நிலைகள் மேகங்களாக வாழ்வில் சூழலாம். அந்தச் சூழலில் கர்த்...

Read
எந்தச் சூழ்நிலையிலும் தாங்கும் தேவ கிருபை!
18 Aug

எந்தச் சூழ்நிலையிலும் தாங்கும் தேவ கிருபை!

கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 94:18

இன்றைய வேத பகுதி: சங்கீதம் 94:1-23 தேவனுடைய கிருபை என்பது, எந்தச் சூழ்நிலையில் எதைத் தேவன் நமக்கு அளித்தால், அந்தச் சூழ்நிலையை நாம் வெற்றியாகக் கடந்து போகமுடியுமோ, அதனை நமக்கு அளித்து ஆதரிப்பதுதான். எனவே, எந்த நிலைமையில் நாம் நிற்க நேரிட்டாலும், அந்த நிலைமையில் நம்மைத் தாங்கி நடத்தத் தேவன் எதையாவது செய்வார் என்பதே விசுவாசம்.சில நண்பர்களை தந்து நம்மை திருப்தியாக்குவதும் தேவ கிருபைதான். நன்மைகள் குறைந்து போனாலும் மனதில...

Read