Jesus Power
Ministries

எங்கள் சபையின் நோக்கம்

எங்கள் தரிசனமும் பணியும்

தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி, கிறிஸ்துவின் அன்பில் ஒன்றிணைந்து, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு மனிதர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மாற்றத்தையும் உருவாக்குவதே எங்கள் அழைப்பாகும்.

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட விசுவாசப் பயணம்

ஆராதனை, ஜெபம், வேதாகமப் போதனை, அன்பான ஐக்கியம் மற்றும் சமூக சேவையின் மூலம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் வளர்ந்து, தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆசீர்வாதமாக வாழ வழிநடத்துகிறோம்.

01
Our Vision

எங்கள் தரிசனம்

திரளான ஆத்துமாக்களை கிறிஸ்துவின் இரட்சிப்புக்குள் வழிநடத்தி, தேசத்திற்காக ஜெபத்தில் திறப்பிலே நின்று, தேவனுடைய அன்பை நற்கிரியைகளின் மூலம் வெளிப்படுத்தி, சபைகள் இல்லாத இடங்களில் ஆவிக்குரிய சபைகளை ஸ்தாபித்து, தேவனுடையராஜ்யத்தை விரிவுபடுத்துவதே எங்கள் தரிசனம்.

  • கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வலிமையான விசுவாசக் குடும்பத்தை உருவாக்குதல்.
  • வேதாகம சத்தியத்தின் மூலம் வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்துதல்.
  • தலைமுறைகள் தேவனுடைய வழியில் நடக்க ஆவிக்குரிய வழிகாட்டுதலை வழங்குதல்.
02
Our Mission

எங்கள் பணி

- தேவனுடைய வார்த்தையை தைரியமாக அறிவித்து, மக்களை இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்புக்குள் வழிநடத்தி, அவர்களை தேவனோடு ஆழமான உறவுக்குள் வளர்த்தெடுத்தல்.

  • - இடைவிடாத ஜெபத்தின் மூலம் தேசம், மக்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து அதிகாரத்தில் இருப்போருக்காக திறப்பிலே நின்று பரிந்துபேசுதல்.
  • - கிறிஸ்துவின் அன்பை நற்கிரியைகளின் மூலம் வெளிப்படுத்தி, திக்கற்றவர்கள், விதவைகள் மற்றும் தேவையுள்ளவர்களை அக்கறையுடன் பராமரித்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்தல். மேலும், பொருளாதாரக்குறைவினால் தங்கள் மகள்களின் திருமணத்தை நடத்த முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு இயன்ற உதவிகளை வழங்கி, இத்தகைய அன்பின்செயல்களின் மூலம் ஆத்துமாக்களை தேவனிடமாக வழிநடத்துதல்.
  • - விசுவாசிகளை சீஷர்களாக உருவாக்கி, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் ஆவிக்குரிய முதிர்ச்சியிலும், பரிசுத்த வாழ்விலும் நிலைநிறுத்துதல். - சபைகள் இல்லாத பகுதிகளில் புதிய ஆவிக்குரிய சபைகளை ஸ்தாபித்து, உள்ளூர் தலைவர்களை உருவாக்கி, சுவிசேஷத்தை எல்லா இடங்களிலும் கொண்டு சென்று தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்துதல்.

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”

மத்தேயு 28:19–20

எங்கள் அடிப்படை கோட்ப்பாடு/நம்பிக்கை

எங்கள் சபையின் ஒவ்வொரு ஊழியத்தையும் வழிநடத்தும் வேதாகம அடிப்படையிலான மதிப்புகள்.

வேதாகம சத்தியம்

தேவனுடைய வார்த்தையை எங்கள் வாழ்க்கைக்கும் ஊழியத்திற்கும் உறுதியான அடித்தளமாகக் கொள்கிறோம்.

கிறிஸ்துவின் அன்பு

வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறோம்.

அன்பான ஐக்கியம்

ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, ஒன்றிணைந்து ஆவிக்குரிய வளர்ச்சியில் முன்னேறுகிறோம்.

தாழ்மையான சேவை

இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, மக்களின் தேவைகளை இரக்கத்துடன் சந்திக்கிறோம்.